ஷிரந்தி ராஜபக்சவால் கேரளா கோவிலுக்குள் வெடித்த பிரளையம்!
கேரளாவிலுள்ள (Kerala) குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் பொதுவாக இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி என்பது மறுக்கப்பட்ட ஒரு விடயமாகும்.
இருப்பினும், பௌத்தமும் மற்றும் சமணமும் மதங்கள் அல்ல எனவும் அவை ஒரு வாழும் முறை எனவும் கருதி இந்துக்களுடன் சேர்த்து இவர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதுண்டு.
இந்தநிலையில், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் அவரது மனைவியான ஷிரந்தி ராஜபக்ச (Shiranthi Rajapaksa) ஆகியோர் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
மகிந்த ராஜபக்ச ஒரு பௌத்தர் என்பதால் அவரது மனைவியும் ஒரு பௌத்தர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் நாட்டிற்கு திரும்பியவுடன் ஷிரந்தி ராஜபக்ச ஒரு கிறிஸ்தவர் என்ற தகவல் வெளியாகி அது பாரிய சர்ச்சையாக வெடித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பிலான விரிவான பிண்ணனி, தென்னிலங்கை தரப்பின் மறைக்கப்பட்ட சில அரசியல் உண்மைகள் மற்றும் அரசியல் சார் பலதரப்பட்ட விடங்கள் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

