சிறுவர் புற்றுநோயாளர்கள் குறித்த முக்கிய அறிக்கையை மறைத்த சுகாதார அமைச்சு
இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் சிறுவர் புற்றுநோயாளர்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் காரணங்கள் தொடர்பில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையை சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு மறைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற திட்ட ஆலோசகர் (united nations climate change Adaptation plane) போராசிரியர் டப்ளியு.எம். விமலசூரிய தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பல் விபத்தின் பின்னர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிறுவர் புற்று நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதாக தனக்கு கிடைப்பெற்ற புள்ளிவிபரங்களை கொண்டு அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
பல கணிப்பீடு
அவர் புற்றுநோய் தொடர்பில் பல கணிப்பீடுகளை செய்துள்ள நிலையில், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மேற்கொண்ட பரிசோதனைகளில் குறித்த புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த அறிக்கை சர்வதேச சுகாதார நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் பார்வைக்கு விடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தென் மாகாணத்தில் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் புற்றுநோயளர்கள் அதிகரித்துள்ளனர்.
புற்றுநோயாளர்கள்
இது தொடர்பில் மஹரகம வைத்தியசாலையால் மேற்கொண்ட பரிசோதனையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களில் சிறுவர் புற்றுநோயாளர்களின் அதிகரிப்பு மற்றும் அதற்கான காரணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இரண்டு வருடங்களில் சடுதியான அதிகரிப்பு ஏற்கட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது இருப்பினும், சுகாதார அமைச்சு இந்த தகவல்களை வெளியிடாமல் மறைத்த வைத்துள்ளது.
என்னிடம் அது தொடர்பான அறிக்கை இருக்கிறது அத்தோடு, இலங்கையில் தற்போது புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளில் முன்னேற்றம் குறைவாக காணப்படுகின்றது.
வைத்திய அறிக்கை
வைத்திய அறிக்கையின் படி மருந்துகளின் தரம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ பிளாஸ்டிக் நெனோ பிளாஸ்டிக் இதற்க பிரதான காரணமாகும் இவை நீர் மற்றும் உணவுகள் மூலம் சிறுவர்களின் உடல்களுக்குள் செல்கின்றன அத்தோடு குறிப்பாக கடல் உணவுகளாகும்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பல் விபத்தின் போது கடலில் கலந்த பிளாஸ்டிக் துகள்களே மூல காரணமாகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எதிர்கால சந்ததியினருக்கு பெரும் ஆபத்தாக அமையும்” அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

