மிக நீண்ட கருமையான தலை முடி வேண்டுமா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக சிறுவர் முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பாரிய பிரச்சனையாகவுள்ளது.
இந்த முடி கொட்டும் பிரச்சனையால் மனதளவில் பெரும் பிரச்சனையைகளை ஏற்படுத்துகின்றது.
இந்த முடிகொட்டுவதற்கு அதிக மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, மரபணுக்கள் மற்றும் இரசாயன உபயோகங்கள் என்பன காரணமாக அமைகின்றது. இதற்கான மாற்று வழிகளாக கெமிக்கல் நிறைந்த தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அது தற்காலிகமாக ஒரு பலனை கொடுக்குமே தவிர பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். அந்தவகையால் இதற்கான தீர்வினை இயற்கை மொல்லாமே சரிப்படுத்த வேண்டும்.
தேவையான பொருட்கள்
- சுத்தமான செக்கிலாட்டின தேங்காய் எண்ணெய்-250 மி.லீ
- வேப்பம்பட்டை -20 கிராம்.
- செம்பருத்தி பூ-(நிழலில் காய வைத்தது 1 கைப்பிடி அளவு )
- நெல்லிக்காய் -(சிறு துண்டுகளாக வெட்டி காய வைத்தது)
- வெட்டிவேர்-20 கிராம்
செய்முறை
தேங்காய் எண்ணெயில் ஒரு இரவு முழுவதும் மேற்குறிப்பிட்ட பொருட்களை ஊறவைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இதே எண்ணெயில் பாசிப்பருப்பு -50 கி,வெந்தயம்-50 கி சேர்த்துக்கொண்டால் இன்னும் அதிகமான பயன்கள் கிடைக்கும்.
உடற்குழுமை உள்ளவர்களாக இருந்தால் இந்த 2 பொருட்களை மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
ஊறவைத்த எண்ணெயை ஒரு கண்ணாடி கொள்கலனிற்கு மாற்றி 2 நாட்கள் சூரிய ஒளியில் (காலை சூரிய உதயம் முதல் காலை 10 மணிவரை ), மாலையில் 2 மணிமுதல் வைக்கலாம். இதன் சக்கையை வீசிவிடாமல் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
எண்ணெய்யின் நிறம் சிவப்பாக மாறும்போது பொருட்களை மாற்றுவது சிறந்தது. இதனை நன்றாக மயிரவேர்கால்களில் படுமாறு மசாஜ் செய்து வைக்க வேண்டும்.
இதற்கு தலையில் மேற்பகுதியில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகை நீக்கும் சக்தி உள்ளது எனவே தினமும் பயன்படுத்தலாம்.
இதன்மூலம் முடி அதிர்வை தடுப்பதோடு ,நீளமான கரு கரு முடியையும் பெறலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
