முடி உதிர்வால் கவலைப்படுகின்றீர்களா...இலகுவில் விடுபட இதனை மட்டும் செய்யுங்கள்
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை முடி கொட்டுதல் ஆகும்.
இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, உடல் உஷ்ணம், மரபு போன்ற பலவித காரணங்கள் உண்டு.
இப்பொழுது நாம் முடி கொட்டுதலை தடுத்து முடி வளர உதவும் சில உணவுகளை பற்றி பார்ப்போம்.
முடியின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்
1. புரதசத்து நிறைந்த உணவுகள்
ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு பபுரதச்சத்து மிக மிக முக்கியம்.
தினமும் தேவையான அளவு புரதச்சத்து உணவினை எடுத்து வந்தால் உங்களின் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் முட்டை, பால், இறைச்சி,கொட்டை வகைகள் ஆகும்.
2. இரும்புசத்து நிறைந்த உணவுகள்
முடியின் வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியமான உடலிற்கு இரும்புசத்து மிக மிக முக்கியம்.
தினமும் தேவையான அளவு இரும்பு சத்து உணவினை எடுத்து வந்தால் உங்களின் முடி உதிர்வு குறைந்து ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஏற்படும்.
இரும்புசத்து அதிகம் நிறைந்த உணவுகள் முருங்கை கீரை, பேரிச்சம்பழம், மாதுளை, கொய்யப்பழம், பாதாம், பீட்ரூட், ஈரல் போன்ற உணவுகள் ஆகும்.
3. கொழுப்புகள்
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைத்து உடல் எடையினை குறைக்க முக்கியமாக அமைவது ஒமேகா-3 கொழுப்புகள் ஆகும்.
இது உங்கள் முடி, சருமம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது.
கொழுப்புகள் முட்டை, பாதம், மீன் போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்துள்ளது.
4. விட்டமின் A
முடி கொட்டுதலை தடுத்து முடியின் வளர்ச்சியினை தூண்டுவதற்ற்கு விட்டமின் A நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியம்.
விட்டமின் A அதிகம் உள்ள உணவுகள் கரட், முருங்கை கீரை, மாம்பழம், பசலை கீரை போன்ற உணவுகள்.
மேலும் விட்டமின் A உணவுகள் உங்கள் கண் பார்வையினை மேம்படுத்த உதவுகின்றது.
எனவே முடியின் வளர்ச்சிக்கு விட்டமின் A நிறைந்த உணவுகளை உண்டு வாருங்கள்.
5. விட்டமின் C
முடி உதிர்தலை தடுத்து ஆரோக்கியமான முடியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கினை வகிக்கும் விட்டமின் C நிறைந்த உணவு ஆகும்.
மேலும் விட்டமின் C நிறைந்த உணவுகள் உங்களின் சருமம் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கினை வகிக்கின்றது.
விட்டமின் C நிறைந்த உணவுகள் கொய்யா பழம், ஆரஞ்சு பழம், முருங்கை கீரை,அன்னாசிப்பழம், ஆப்பிள் போன்ற பலவகை உணவுகள் ஆகும்.
எனவே இவற்றினை உண்டு பயன் பெறுங்கள்
6. விட்டமின் E
விட்டமின் E நிறைந்த உணவுகள் உங்களின் முடி உதிர்தலை தடுத்து முடியின் வளர்ச்சியினை மேம்படுத்த உதவும்.
விட்டமின் E நிறைந்த உணவுகள் பாதாம், பசலை கீரை, அவகடோ, கடலை போன்ற உணவுகள் ஆகும்.
எனவே இவ்வகை உணவுகளை உண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துங்கள்.