ட்ரம்பின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஹமாஸ்! அமைதிக்கான எதிர்பார்பில் காசா
காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தின் சில பகுதிகளுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இருப்பினும், இந்த பிரச்சினைகள் குறித்து மேலும் விரிவாக ஆராயப்படுதல் தேவை என்று அந்த அமைப்பு வலியுறுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய பணைய கைதிகள் அனைவரையும் விடுவிக்க கொள்கையளவில் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
இது குறித்த கூடுதல் விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
காசா பகுதியின் நிர்வாகம் சுயாதீன பாலஸ்தீன தொழில்நுட்ப நிபுணர்களின் குழுவிடம் மாற்றப்படும் என்ற தனது நிலைப்பாட்டை ஹமாஸ் அமைப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அமைதி முயற்சியில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ட்ரம்ப் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை ஹமாஸுக்கு அவகாசம் அளித்துள்ளார்.
"ட்ரூத் சோஷியல்" சமூக வலையமைப்பில் அவர் வெளியிட்ட பதிவில்,
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்குள், அதாவது மத்திய ஐரோப்பிய நேரப்படி நள்ளிரவுக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடைசி வாய்ப்பு
இந்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தாவிட்டால் ஹமாஸ் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்ட திட்டத்தின்படி, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்படும் என நம்பப்படுகிறது.
மேலும், பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக, ஹமாஸால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள பணயக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் இறந்த பணயக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், காசா பகுதியின் இடைக்கால நிர்வாகம், ட்ரம்ப் மற்றும் முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர் ஆகியோரால் இணைந்து தலைமையிலான ஒரு சர்வதேச குழுவின் மேற்பார்வையின் கீழ் ஒரு பாலஸ்தீன தொழில்நுட்ப நிபுணர் குழுவால் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
