காஸாவுக்கு ட்ரம்ப் கொடுத்த அவகாசம்: இறுதி கட்டத்தை நோக்கி போர்
இஸ்ரேல் (Israel) உடனான போர் நிறுத்தம் தொடர்பான இருபது அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு (Gaza) மூன்று தொடக்கம் நான்கு நாள்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அவகாசமாக அளித்துள்ளார்.
இந்தநிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்பு மற்றும் ஹமாஸ் தரப்பிலுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது போன்றவற்றிற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால் காஸாவிலுள்ள இஸ்ரேல் வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்படுவார்கள் என பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காஸா இடையே இரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது.
நிபந்தனைகள்
உலக நாடுகளிடையே நடைபெற்ற ஏழு போரை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கும் டொனால்ட் ட்ரம்ப், தற்போது இஸ்ரேல் மற்றும் காஸா போரை நிறுத்துவதற்கான முயற்சியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
காஸா போர் நிறுத்தத்துக்காக டொனால்ட் ட்ரம்ப்பால் முன்மொழியப்பட்ட முக்கியமான இருபது நிபந்தனைகள் அடங்கிய திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்
இதனிடையே ஹமாஸிற்கும் இது தொடர்பாக பதிலளிக்க மூன்று தொடக்கம் நான்கு நாட்களை டொனால்ட் ட்ரம்ப் அவகாசமாக அளித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டெனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில், “போர் நிறுத்த பரிந்துரைகள் தொடர்பாக ஆலோசித்து பதிலளிக்க ஹமாஸுக்கு மூன்று தொடக்கம் நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற தரப்பினரும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் தெரிவித்ததால் ஹமாஸின் பதிலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.
ஹமாஸ் அமைப்பு
அரபு நாடுகள் கூட இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதுடன் முஸ்லிம் நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பின் பதிலுக்காக காத்திருக்கின்றோம் அத்தோடு ஹமாஸ் இதற்கு ஒப்புதல் தெரிவிக்கலாம் அல்லது மறுக்கலாம்.
அப்படி மறுத்தால் இதன் முடிவு மிகவும் சோகமானதாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
