காசாவை சுடுகாடாக்கிய இஸ்ரேல் - சர்வதேச அரங்கில் மூக்குடைந்த நெதன்யாகு
நெதன்யாகுவின் உரையை 'அப்பட்டமான பொய்கள்' என்று ஹமாஸ் கண்டித்துள்ளது.
காசாவில் (Gaza) இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் (Israel) மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய் அதற்கு ஆதாரமில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐநா சபையில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலியப் பிரதமர் உரைக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ் அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
அப்பட்டமான பொய்கள்
ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உரைக்கு முன்னதாக பிரதிநிதிகள் பெருமளவில் வெளிநடப்பு செய்தது காசா போரின் விளைவாக இஸ்ரேல் "தனிமைப்படுத்தப்பட்டதை" காட்டுகிறது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அப்பட்டமான பொய்கள் மற்றும் முரண்பாடுகள் கொண்ட ஒரு தவறான உரையை நெதன்யாகு நிகழ்த்தியுள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
பொய்கள் ஒருபோதும் உண்மையை மாற்றாது எனவும் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
உரையைப் புறக்கணிப்பது
நெதன்யாகுவின் உரையைப் புறக்கணிப்பது இஸ்ரேலின் தனிமைப்படுத்தலின் ஒரு வெளிப்பாடாகும், மேலும் அழிப்புப் போரின் விளைவுகளும் ஆகும் என ஹமாஸ் மூத்த தலைவர் தாஹெர் அல்-நுனு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று உரையாற்றிய போது அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறியதோடு பலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் பிரதிநிதிகள் யாருமற்ற நிலையில் வெறிச்சோடிய ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் நெதன்யாகு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
