பிணை கைதிகளை விடுவிக்க முடியாது : ஹமாஸ் பிடிவாதம்
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களை நிறுத்தும் வரை பிணைக்கைதிகளை விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 07 ஆம் திகதி சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
காஸாவில் தொடர் குண்டுவீச்சு
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காஸாவில் தொடர் குண்டுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதில் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பால் பயணக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் காசா எல்லையில் சிறைவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வான் தாக்குதலை நிறுத்தினாலேயே
இவ்வாறு இஸ்ரேல் நடத்தும் வான் தாக்குதலை நிறுத்தினாலேயே பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாசை ஒழித்துக் கட்டும் வரை யுத்தம் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.