தொடரும் மருத்துவ துறை மீதான குற்றச்சாட்டு: சிக்கிய மற்றுமொரு வைத்தியசாலை
இலங்கையில் (Sri Lanka) உள்ள மருத்துவமனைகளின் மீது தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தென்னிலங்கையின் பிரதான அரச வைத்தியசாலை ஒன்றின் மீதும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
போதிய பராமரிப்பின்மையும், பாராமுகமாக நடைபெறும் செயற்பாடுகளும் அரச வைத்தியத்துறையின் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் விபரிக்க செய்கிறது.
அந்த வகையில், ஹம்பாந்தோட்டையில் (Hambantota) உள்ள ஒரு அரச வைத்தியசாலையின் கழிவறை தொடர்பான புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தேசிய வைத்தியசாலை
நோய் நிலைமைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய வைத்தியசாலையின் இந்த நிலை கவலையளிக்கும் ஒரு விடயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
தெற்கின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான, ஹம்பாந்தோட்டை தேசிய வைத்தியசாலையின் பராமரிப்பு தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தனது முகப்புத்தக பதிவில் இந்த விடயத்தை விபரித்துள்ளார்.
முறைகேடுகள்
குறித்த பதிவில் ''வருத்தத்துடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஒரு இலங்கையர் என்ற வகையில், இன்று அதிகாலை 1:30 மணியளவில் ஹம்பாந்தோட்டை தேசிய வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.
வார்டு எண் 04 இல் உள்ள ஆண்கள் கழிவறையில் நான் கைப்பற்றிய உண்மையான காட்சிகள் கீழே உள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் இது மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது." என பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் வைத்தியத்துறை மீதான முறைகேடுகள், குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படுகின்ற போதும் இவ்வாறான பாராமுக செயற்பாடுகள் பின்னடைவான போக்கையே பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |