இலங்கையில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முதலீடு: ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் கையளிப்பு
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் பெருந்தொகையான நிதி இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த நிதி முதலீட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதற்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தினால் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு
சரக்கு வசதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் வணிக மயமாக்குவதற்கும் இந்த முதலீடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகமானது தற்போது டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாக மாறி வருவதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |