ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் அரசாங்கத்துக்கு இலாபப் பங்கு எதுவும் கிடைக்கவில்லை : நிமல் சிறிபால டி சில்வா
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், இலாபம் பெறும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை துறைமுக அதிகாரசபை
“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் எந்தவித இலாபமும் ஈட்டப்படாத காரணத்தினால் அரசாங்கத்துக்கு இலாபப் பங்கு எதுவும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மொத்த பங்குகளில் 15 சதவீத பங்குகளை இலங்கை துறைமுக அதிகாரசபை கொண்டுள்ளது.
இதுவரையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் நிறுத்தி, அவற்றை மீள் ஏற்றுமதி செய்வதே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பிரதான செயற்பாடாக இருந்து வந்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.