அம்பாறையில் தனியார் காணியில் கைக்குண்டு ஒன்று மீட்பு! (படம்)
Sri Lanka Police Investigation
By pavan
அம்பாறை-திருக்கோவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்றை இன்று (09) மீட்டுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான காணியில், சம்பவதினமான இன்று விடுதி காவலாளி காணியில் வளர்ந்துள்ள புற்களை வெட்டி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது நிலத்தில் புதையுண்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைத்து குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 53 நிமிடங்கள் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்