தேங்காய் ஏற்றுமதி : வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி தேங்காய் ஏற்றுமதி வருவாய் கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 158.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் 25.3 சதவீதம் அதிகரித்து 198.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
தேயிலை ஏற்றுமதி வருவாய்
இதேவேளை கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 565.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த தேயிலை ஏற்றுமதி வருவாய், இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் 7.9 சதவீதம் அதிகரித்து 610.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதனிடையே ஐந்து மாதங்களில் கருப்பு தானிய ஏற்றுமதி வருவாய் 55.8 சதவீதம் அதிகரித்து 171.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

