பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக தொடர்ந்து பயணப்பட வேண்டும் : அதிபர் ரணிலின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே புது வருடத்தை (2024) ஆரம்பிப்பதாகவும், ஆயிரக்கணக்கிலான நம், எண்ணங்களைப் பூர்த்தி செய்ய, நாட்டை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாழ்த்து செய்தியில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
பொருளாதார ஸ்திரத்தன்மை
கடந்த காலங்களில் நாம்செய்த அர்ப்பணிப்புக்கள் மற்றும் துயரங்களைத் தாங்கும் தியாகங்களின் பலனாக, நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்க முடிந்துள்ளது.
இருப்பினும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதேபாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. அது மலர்ப் பாதையாக இல்லாமல், முட்களும், கற்களும் நிறைந்த பாதையாகவே அமைந்திருக்கும்.
இதனால், நாட்டை மீளக் கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இலங்கையராகிய எமது பொறுப்பாகும்.
நாட்டின் முன்னேற்றம்
ஜனவரி மாதத்திற்கு ஜேனஸ் எனும் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அக்கடவளைால் முன்னோக்கி மாத்திரம் அன்றி, பின்னோக்கியும் பார்க்க முடியுமாம்.
அதனால் எதிர்காலம் தொடர்பில் மட்டுமன்றி, கடந்த காலம் தொடர்பிலும் அறிந்து, ஒவ்வொருவரினதும் சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்துக்காக எமது பொறுப்புக்களை அறிந்து கொள்வோம். அவற்றை செயற்படுத்தி, தாய் நாட்டை பலப்படுத்துவோம்.
அதற்காக பொறுப்புடனும் அர்பணிப்புடனும் செயற்படுவோம். இதற்காக புத்தாண்டை செழிப்பானதாக மாற்றிக்கொள்வோம். பிறந்திருக்கும் ஆண்டு, அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |