ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே இன்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, கல்வித் துறையிலும், ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் உள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டள்ளது.
பிரச்சினைகள்
இந்த சேவைகளில் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளின் மாணவர்களை சேர்த்தல், நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவேனா அமைப்பில் உள்ள சிக்கல் சூழ்நிலைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து அதன்போது கவனம் செலுத்துப்பட்டுள்ளது.
அத்தோடு, அரை அரசு பாடாசாலைகளில் கட்டணம் வசூலிப்பது, வகுப்பு அளவுகளை 35 மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது, வகுப்பு அளவுகளை மட்டுப்படுத்துவது மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைக்கான வெட்டுப் பரீட்சைகளை நடத்துவது போன்ற பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)