மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Parliament of Sri Lanka
A D Susil Premajayantha
Sri Lankan Schools
By Sumithiran
பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிமேஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (27) நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் ஹேஷா விதானகே, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தெரிவு
இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி பாதணி விநியோகம் ஆரம்பித்து 27 ஆம் திகதி நிறைவடையுமென அவர் குறிப்பிட்டார்.

இந்த செயற்றிட்டத்திற்காக மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 740,000 மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி