அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் இரண்டு புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு சட்டமூலங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவினால் (Sudarshani Fernandopulle) தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளிலும் 30 சதவீதத்துக்கும் குறையாத பெண் பிரதிநிதித்துவத்தை சேர்க்கும் வகையில், நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வரைவு சட்டமூலம்
மேலும், ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியலில் 50 வீதத்துக்கும் குறையாத பெண் உறுப்பினர்களை உள்ளடக்கும் யோசனையொன்றும் வரைவு சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிய போதும் அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால் உரிய கோரிக்கையை சட்டமாக கொண்டு வர தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |