கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : மலேசியாவில் சிக்கிய முக்கிய புள்ளி
மலேசியாவில் (Malaysia) கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மனுதினு பத்மசிறி பெரேரா எனப்படும் கெஹெல்பத்தர பத்மேவுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ஹரக்கட்டாவின் மனைவியும் அவர்களில் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த கைதுகள் குறித்து மலேசியா இன்னும் இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
பாதாள உலகக் கும்பல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை உட்பட, இந்த நாட்டில் பல கொலைகளில் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்பட்டதாக நேற்று (09.07.2025) தகவல்கள் வெளியாகின.
காவல்துறை வட்டாரங்களின்படி, மூன்று பேர் உட்பட ஐந்து பேர், எல்லையைக் கடந்து தாய்லாந்திற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது மலேசியப் காவல்துறையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஹல்பத்தர பத்மே என்பவர் இலங்கையில் தேடப்படும் குற்றவாளியாக சர்வதேச சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியாவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
