இறுதிவரை போராடிய இலங்கை - 2 ஓட்டங்களால் வென்றது இந்தியா
புதிய இணைப்பு
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
163 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 160 ஓட்டங்களை எடுத்து தோல்வியை தழுவியது.
முதலாவது போட்டி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இலங்கை துடுப்பாட்ட அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி இன்று தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
இரவு 7 மணிக்கு ஆரம்பமான ஆட்டத்தில் வென்ற இலங்கை களத்தடுப்பை தேர்வு செய்தது .
இந்திய அணி
#TeamIndia post 162/5 on the board!
— BCCI (@BCCI) January 3, 2023
4⃣1⃣* for Deepak Hooda
3⃣7⃣ for Ishan Kishan
3⃣1⃣* for Akshar Patel
Over to our bowlers now ? ?
Sri Lanka innings underway.
Scorecard ▶️ https://t.co/uth38CaxaP #INDvSL pic.twitter.com/9yrF802Khi
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இலங்கைக்கு 163 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.
குறித்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அக்சர் – ஹூடா ஜோடி அதிரடியாக விளையாடி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை குவித்தனர்.
20 பந்துபரிமாற்ற முடிவில் 5 ஆட்ட இழப்பிற்கு இந்திய அணி 162 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இலங்கை அணி
இந்திய அணி சார்பில் ஹூடா 41, இஷான் கிஷான் 37, அக்சர் 31 ஓட்டங்களை அதிகப்படியாக எடுத்துள்ளனர் .
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 11 பந்து பரிமாற்ற நிறைவில் 68 ஓட்டங்களுக்கு 5 ஆட்டமிழப்பை சந்தித்துள்ளது.
தற்போது விளையாடும் இலங்கை அணியை குறைத்து எடைபோட வேண்டாம் என எச்சரித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
இந்த கருத்து பாண்டியாவின் தலைமைத்துவத்திற்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
