முன்னாள் மனைவிக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசை அன்பளிப்பு செய்த இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது முன்னாள் மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சிற்கு ஒரு சொகுசு லேண்ட் ரோவர் டிஃபென்டரை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யா பரிசளித்த இந்த சொகுசு SUV சுமார் 40 மில்லியன்(04 கோடி) இந்திய ரூபாய் மதிப்புடையது.
பிரிந்தாலும் மகனுக்காக எடுக்கப்பட்ட முடிவு
பாண்ட்யாவும் நடாசாவும் தனிப்பட்ட முறையில் பிரிந்திருந்தாலும், அவர்கள் தங்கள் மகன் அகஸ்தியாவுக்கு கூட்டு பெற்றோரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

image -the economic times
பிரிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முன்னாள் மனைவிக்கு இவ்வளவு மதிப்புமிக்க பரிசை பரிசளிக்க பாண்ட்யா நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமுக ஊடகங்களில் வைரல்
இந்த நிகழ்வின் படங்கள், காரை விற்ற நிறுவனத்தால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன, "ஹர்திக் பாண்ட்யா மீண்டும் தனது லேண்ட் ரோவர் டிஃபென்டரை வாங்க நவ்னிட் மோட்டார்ஸைத் தேர்வு செய்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |