எமது கட்சிக்குள் சதியை உருவாக்குபவன் நானே- பகிரங்கமாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்!
கட்சிக்குள் சதி ஏற்படுமானால் அதனை உருவாக்க வேண்டியது தான் எனவும் ஆனாலும் அப்படி எதுவும் இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஓய்வில் இருந்த இவர் மீண்டும் ஊடக்களுக்கு கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். எனினும் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கட்டாயம் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அணிகள் ஒன்றுசேர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதிகள் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து சஜித் தலைவர் என்பதை உறுதிபடுத்திய பிரேரணை தேவையற்ற ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.