ஐந்து விளையாட்டுக்களின் பதிவுகள் இடைநிறுத்தம்: வெளியானது விசேட வர்த்தமானி அறிவித்தல்
இலங்கையில் 5 விளையாட்டுகளுக்கான நிர்வாக சபைகளின் பதிவுகளை இடைநிறுத்தி விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, டிசம்பர் 22, 2023 திகதி இடப்பட்ட புதிய அறிக்கையின் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாக சபைகளின் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவிப்பு
இந்நிலையில், இலங்கை வில்வித்தை சங்கம், இலங்கை கபடி கூட்டமைப்பு, இலங்கை மல்யுத்த சம்மேளனம், இலங்கை பிரிஜ் கூட்டமைப்பு மற்றும் இலங்கை ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் என்பவற்றின் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, விளையாட்டுத்துறை அமைச்சர் 1973 ஆம் ஆண்டு இலக்கம் 25 ஆம் ஆண்டு விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
தற்காலிக நடவடிக்கை
மேலும், பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோ, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த விளையாட்டுகளின் நிர்வாக மற்றும் ஏனைய தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக நியமிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |