ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள்: நிதி உதவியை வழங்கிய விளையாட்டு அமைச்சர்!
நடைபெறவிருக்கும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் (Paris Olympic 2024) போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் இலங்கை (Sri Lanka) வீரர்களுக்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் ஆறு விளையாட்டு வீரர்களுக்கும் தலா 1 மில்லியன் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இளம் வீராங்கனை
மேலதிகமாக, சீனாவில் (China) இடம்பெற்ற ஆசிய பாராலிம்பிக் (Asian Para Games) விளையாட்டுகளில் முதல் எட்டு இடங்களை பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு மொத்தம் 1280 லட்சம் ரூபா பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளம் வீராங்கனையான தருஷி, ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றமைக்காக 15 மில்லியன் ரூபாவும் அஞ்சல் ஓட்டத்தில் பதக்கம் வென்றமைக்காக 2.5 மில்லியன் ரூபாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நிதி நெருக்கடி
இதன்போது, நாட்டின் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
அவர் விளையாட்டை ஊக்குவிப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
மேலும், நாட்டின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வெற்றி அடைய விளையாட்டு வீரர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |