நெருக்கடியின் எதிரொலி!! இந்திய திரைப்பிரபலங்களை நாடும் இலங்கை அரசு (படம்)
Sri Lanka Economic Crisis
Sri Lanka Tourism
India
Indian Actress
Harin Fernando
By Kanna
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்திய திரைப்படத்துறை பிரமுகர்களை இன்று சந்தித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான வழிகளை ஆராயும் முயற்சியில் அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
பிரபல இந்திய நடிகர் டினோ மோரியா(Dino Morea) மற்றும் நடிகை சித்ரங்கதா சிங்(Chitrangada Singh) ஆகியோருடனேயே அமைச்சர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த கலந்துரையாடல்
இவர்களது சந்திப்புபின் போது, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான சுற்றுலாத் தலமாக இலங்கையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இந்திய படங்களுக்கு இலங்கையை ஒரு இடமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் விவாதித்துள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி