ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு
அமைச்சு பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும். இதுகுறித்து கட்சி முடிவு எடுக்கட்டும். இதற்காக ஒரு நாள் பொறுத்திருப்பேன்.
சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் இந்த நேரத்தில் அரசியலைப் பற்றி சிந்திக்காமல் புதிய அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இன்னும் ஆறு மாதங்களில் எங்களுக்கு ஒரு நாடு இருக்காது.
சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்தப் புதிய அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கடியை தீர்க்க உதவுவதை நான் விரும்புகிறேன்.
கோட்டாபய வெற்றி பெற நான் அரசாங்கத்துடன் இணைய மாட்டேன். அவர் தோல்வியுற்று விட்டார். இப்போது நாம் இந்த தோல்வியுற்ற நபரை வெளியே அனுப்ப வேண்டும், ஆனால் அது அரசியலமைப்பின் மூலம் நடக்க வேண்டும்.
புதிய அமைச்சரவையில் இணைந்து கொண்டாலும் எந்த அமைச்சு சலுகைகளையும் ஏற்க மாட்டோம்” என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
