யாழ். இந்துக் கல்லூரியின் சாதனைகள் மிகவும் சிறப்பானது : பிரதமர் புகழாரம்

Jaffna Hindu College Jaffna Sri Lanka Harini Amarasuriya
By Raghav Feb 16, 2025 03:15 AM GMT
Report

யாழ். இந்துக் கல்லூரி நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் பிரதான பாடசாலை எனவும், இந்த பாடசாலை அடைந்துள்ள சாதனைகள் மிகவும் சிறப்பானது எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் (Jaffna) இந்துக் கல்லூரிக்கு இன்று (15.02.2025) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்ட பிரதமர், பாடசாலையின் இந்து கலாசார வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார்.

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு

யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி : பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பு

பாடசாலையின் சாதனை

இதன்போது பாடசாலையின் சாதனைகள் மற்றும் பாடசாலையின் செயற்பாடுகள் குறித்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. 

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனைகள் மிகவும் சிறப்பானது : பிரதமர் புகழாரம் | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “யாழ்ப்பாண இந்துக் கல்லூரி நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் பிரதான பாடசாலைகளில் ஒன்றாகும். இந்த பாடசாலை அடைந்துள்ள சாதனைகள் பற்றி நீங்கள் வழங்கிய அறிக்கை மிகவும் சிறப்பானது.

பாடசாலையின் கணக்கு நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற விதம் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாகும்.

அரசு என்ற வகையில் நாம் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் எதிர்கார்க்கிறோம்.

சற்று முன்னர் ஆரம்பமான தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

சற்று முன்னர் ஆரம்பமான தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்

உயர் தரத்திலான கல்வி

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர் தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும். மேலதிக வகுப்புகள் குறைக்கப்பட வேண்டுமானால், எமது குழந்தைகளுக்கு பாடசாலை மூலம் சிறந்த கல்வியை வழங்க வேண்டும்.

யாழ். இந்துக் கல்லூரியின் சாதனைகள் மிகவும் சிறப்பானது : பிரதமர் புகழாரம் | Harini Amarasuriya Visit To Jaffna Hindu College

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கல்லூரிக்கு மட்டுமன்றி இலங்கையிலுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் மிக உயர்தரமான கல்வியை வழங்க விரும்புகிறோம்.

கல்வி சீர்திருத்தங்களை அமுல்படுத்துவது தொடர்பில் நீங்கள் உட்பட வடமாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.

சிறந்த கல்வியின் மூலம் சமூகத்திற்கு நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட சிறந்த தலைமையை உருவாக்குவது எமது பொறுப்பாகும்". என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, யாழ்.இந்துக்கல்லூரியின் அதிபர் மற்றும் அப்பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


அதானியின் வெளியேற்றம் : இலங்கையை கைவிட்ட இந்தியா : ரணில் வெளியிட்ட அபாய அறிவிப்பு

அதானியின் வெளியேற்றம் : இலங்கையை கைவிட்ட இந்தியா : ரணில் வெளியிட்ட அபாய அறிவிப்பு

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை : அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலை : அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026