ஹரிணி இந்திய உளவுத்துறையின் உறுப்பினர்: சர்ச்சையை கிளப்பிய கஸ்ஸப்ப தேரர்
India
Harini Amarasuriya
Ven. Balangoda Kassapa Thero
By Dharu
பிரதமர் ஹரினி அமரசூரிய இந்திய உளவுத்துறையின் உறுப்பினர் என்றும், தற்போதைய அரசாங்கம் இலங்கையில் இந்தியாவின் அரசியல் செயல்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது எனவும் பலங்கொடை கஸ்ஸப்ப தேரர் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தியப் படையெடுப்பிற்கு எதிராகத் தனது உயிரைத் தியாகம் செய்யவும் அல்லது சிறைக்குச் செல்லவும் கூடத் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனுராதபுரத்தில் கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்படும்தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தில் வைத்து இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் அரசியல் இலக்கு
தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பிரதமர், இந்தியாவின் அரசியல் இலக்குகளுக்காக நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு நட்பான ஒரு கைப்பாவை ஆட்சியாளர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்