நான் பதவி விலகப் போவதில்லை! எதிர்க்கட்சிகளுக்கு ஹர்ஷன பதிலடி
ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு நாட்டு மக்கள் கோரி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்தின் மக்கள் ஆணை
“தன்னை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் குறிப்பிடவில்லை. ஊழல்வாதிகளும், பிணையில் உள்ளவர்களுமே நான் பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றனர்.

நான் பதவி விலகப் போவதில்லை. அதற்கான எந்தவொரு அவசியமும் கிடையாது. நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றேன்.
அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு அமைவாக தனது கடமைகளை நிறைவேற்றுகின்றேன்.
அமைச்சரின் இந்த கருத்து, அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |