முடங்குமா வடக்கு கிழக்கு....! சிலமணி நேரத்தில் சுமந்திரனுக்கு மக்களின் பதில்
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று நண்பகல் வரை மாத்திரம் நிர்வாக முடக்கலை முன்னெடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கை
இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நிர்வாக முடக்கலுக்கு சில அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பல அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நிர்வாக முடக்கல் குறித்து தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் (ITAK) குழப்பமே உள்ளது. இந்தநிலையில், நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பிரித்தானிய கிளை (UK) குறிப்பிட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நிர்வாக முடக்கலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார்.
தனி ஒரு அரசியல் கட்சியின் நிர்வாக முடக்கலுக்கான அழைப்பிற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஆதரவை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு, கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸஇ அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுவாதங்கள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

