இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ரொறன்ரோவில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு சம்பவங்கள்!
Canada
World
Israel-Hamas War
By Beulah
ரொறன்ரோவில் இஸ்ரேல் காசா போர் காரணமாக வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, ரொறன்ரோ பொலிஸ் பிரதானி மெய்ரோன் டெம்கிவ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
“இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
வெறுப்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வெறுப்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை 1600 வீதமாக உயர்வடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதியின் பின்னர் இவ்வாறு வெறுப்புணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அச்சுறுத்தல் விடுத்தல், தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த வெறுப்புணர்வு சம்பவங்கள் பதிவாகி வருகிறது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்