பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு விழுந்த பலத்த அடி!
இஸ்ரேலில் அடுத்த முறை பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.
தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டார் என்றும், ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ள தங்களின் உறவினர்களை மீட்க தாமதம் செய்துவிட்டார் என்றும் இஸ்ரேல் மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக அக்கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
அரசியல் கள நிலவரம்
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் நாட்டின் அரசியல் கள நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி தேர்தல் வந்தால் நெதன்யாகு மீண்டும் பிரதமராக தேர்வாக மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஹீப்ரு செய்தி நிறுவனமான Maariv இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதாவது நெதன்யாகு கட்சிக்கு வெறும் 3.25 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பிரதமாராக இருக்க யார் பொருத்தமானவர்கள் என்றும் கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு 52% பேர் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவர் 'காண்ட்ஸ்தான்' பொருத்தமானவர் என்று பதிலளித்துள்ளனர்.
27% பேர் மட்டுமே நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.