ஹட்டன் - டிக்ஓயா ஆற்றிலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Hatton
By Kathirpriya
ஹட்டன் - டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல்போயிருந்தவரின் சடலம் நேற்றைய தினம் (12) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் - டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த சந்திரசேகரன் சுரேன் என்ற 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மது அருந்திவிட்டு
ஹட்டன் நகருக்கு நேற்று முன்தினம் (11) வந்த இவர், மது அருந்திவிட்டு, பேருந்தில் சென்றுள்ளார், பேருந்தில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்லும் போதே ஆற்றில் விழுந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து தோட்ட மக்கள், காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலின் போது, நேற்றைய தினம் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 13 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்