அதிகரிக்கும் கொரோனா தொற்று- மூடப்பட்டது பிரதான தபால் நிலையம்!
corona
hatton
post office
closed
By Kalaimathy
ஹட்டன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த தபாலகத்தில் பணி புரிந்த இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியானதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ராமய்யா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 17 ஹட்டன் தபால் ஊழியர்களை ரெபிட் அண்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை பயணக்காட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் ஹட்டன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்