ஆடை கொள்வனவிற்காக வந்த இளைஞன் - சி.சி.ரிவியில் பதிவான காட்சியால் வலை வீசும் பொலிஸார்!
police
hatton
robbery
kottagala
By Kalaimathy
ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து, கடை உரிமையாளரின் கைப்பையை திருடிச் சென்ற இளைஞரை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
கொட்டகலை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆடை விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த சந்தேக நபரான இளைஞர், கடை உரிமையாளரின் பையை திருடிச் செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காணொளியை பயன்படுத்தி குறித்த இளைஞனை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பையில் 20,000 ரூபாய் பணமும், சில முக்கியமான ஆவணங்களும் காணப்பட்டதாக தெரிவித்த அதன் உரிமையாளர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி