நகரசபையின் தலைவருக்கும் அவரது 22 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது ஹம்பாந்தோட்டை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவரின் 22 வயது மகளுக்கு கொரோனா தொற்று உதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார ஆய்வாளர் ஆர்.ஆர்.எஸ் மெதவல தெரிவித்தார்.
கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவரும், உறுப்பினரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட குடும்ப உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டு இருந்தனர்.
இதன்படி அவர்களுக்கு இன்று மேற்கொண்ட பி.சி.ஆர் சோதனைகளில் நகரசபையின் தலைவர் மற்றும் அவரது மகள் ஆகியோர் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.