அரிசிக்காக இந்தியா மற்றும் சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளோம் - சஜித் பிரேமதாச சீற்றம்

India People Sajith Premadasa SJB Polonnaruwa Farmers Chine
By Chanakyan Jan 29, 2022 12:45 PM GMT
Report

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் சட்ட மூலத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். சொற்ப இழப்பீடுகளையும் வழங்க முடியாது. விவசாயிகளை ஏமாற்றவும் முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

உரத்தை தடை செய்து விவசாயிகளை பேரழிவில் ஆழ்த்திய அரசாங்கம், குறித்த விவசாயிகள் சிரமப்பட்டு நெற்செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய தயாராகும் போது, சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தின் எதிர்காலம் குறித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு, கொள்கை மற்றும் வேலைத்திட்டம் ஆகியவை உள்ளடங்கும் முகமாக "ஐக்கிய கமத்தொழிலாளர் பிரகடனம்” நாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கற்பனை ரீதியாக உரத்தை தடை செய்து இந்நாட்டின் விளை நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றும் சதித்திட்டத்தை கையில் எடுத்துள்ள அரசாங்கம், தனது கூட்டாளிகளுக்கும், தனது எடுபிடிகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பளித்துள்ளது. 

பொலன்னறுவை உட்பட ரஜரட்ட பகுதிகளை மையமாக கொண்டே தானிய களஞ்சிய தளமாக இலங்கை உருவானது. அப்படியான வரலாற்று சிறப்புமிக்க பிரதேச விவசாய மக்களுக்கு சீனா மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை ஊட்டும் அளவிற்கு தேசப்பற்றுமிக்க அரசாங்கம் கீழ்தரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஆகும் போது அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்த நம் நாட்டை தற்போது சீன அரிசிகளினால் நிரப்பும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும் என்பதோடு அதற்கான பிரேரணைகளை அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து ஒதுக்கீடுகளுக்கும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையின்றி ஆதரவு வழங்கும். குறித்த நட்டஈட்டு சிறியளவிலான தொகை அன்றி ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் உரிய நட்டஈட்டு தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளை நிலங்களை கிராமிய அபிவிருத்தியின் கேந்திர நிலையமாக மாற்றுவதோடு விவசாயிகளை பலப்படுத்தி அவர்களது வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை  ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பேற்கும்.

தற்போது ஒரு சிலர் அமைச்சு பதவி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு புதிய அரசாங்கமொன்றை உருவாக்க முனைகின்றனர். 

விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடும் யுகத்திற்கு முற்றிப்புள்ளி வைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரிசிக்காக இந்தியா மற்றும் சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளோம் - சஜித் பிரேமதாச சீற்றம் | Have Reached Handful India And China


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026