நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ச
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) நாடு திரும்பியுள்ளார்.
ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற கோப்-26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கோட்டாபய நாடு திரும்பியுள்ளார்.
இன்று காலை 8.30 அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானம் மூலம் அரசதலைவர் மற்றும் அயோமா ராஜபக்ச ( Ioma Rajapaksa)ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கடந்த 30 ஆம் திகதி ஸ்கொட்லாந்து பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.