நேருக்கு நேர் மோதிக் கொண்ட தொடருந்துகள்! காலையில் நடந்த அனர்த்தம்
Accident
People
Train
SriLanka
Ragama
By Chanakyan
ராகம மற்றும் பேரலந்த தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இச்சவம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் இது ஒரு பாரிய விபத்து அல்ல எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
புத்தளத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தை, அதன் பின்னால் வந்த மற்றுமொரு தொடருந்து எஞ்சின் மோதியே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ராகம தொடருந்து நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.