உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால்... கிடைக்கும் நன்மைகள் இவைதான்

Food Shortages Healthy Food Recipes
By Independent Writer May 19, 2022 07:50 AM GMT
Report

பொதுவாக உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் விட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம்.

ஒரு கையளவு உலர் திராட்சையில் 108 கலோரிகள், ஒரு கிராம் புரதச்சத்து, 29 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் ஃபைபர், 21 கிராம் சர்க்கரை ஆகியவைத் தவிர இரும்பு, பொட்டாசியம், காப்பர், விட்டமின் பி 6, மாங்கனீஸ், போரான் போன்ற சத்துக்களும் நிரம்பி உள்ளன. அதனை ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் பல நன்மைகளை தருகின்றது.

அந்தவகையில் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உலர் திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி?

  • தண்ணீர்
  • உலர்ந்த திராட்சை
  • எலுமிச்சை (விருப்பத்தை பொறுத்தது)

செய்முறை

2 கப் தண்ணீரில் 150 கிராம் அளவுள்ள உலர் திராட்சையை போட்டு, நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பின்னர் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, மீண்டும் குறைந்த தீயில் சூடாக்கவும்.

இப்போது இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் சுவையை மேலும் கூட்டவும், வைட்டமின் சி சத்தைப் பெறவும் விரும்பினால் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம்.

இந்த தண்ணீரை குடித்த பிறகு, அடுத்த 30 நிமிடங்களுக்கு எதையும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நன்மைகள்

  • இந்த பானம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
  • அசிடிட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர் உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்.
  • இரவு முழுவதும் உலர் திராட்சை ஊறவைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • வைரஸைத் தடுக்க தினந்தோறும் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது.
  • உலர் திராட்சை தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய பொருளாக உள்ளது.
  • இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.
  • திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உங்கள் உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
  • உலர் திராட்சை தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும்.
  • இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுத்து, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.
  • திராட்சைப்பழத்தில் நிறைந்துள்ள பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்துள்ளது.
  • இது உடலில் சேரும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
  • திராட்சையில் உள்ள பொட்டாசியம் உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
  • இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த தண்ணீரை குடிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
  • உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு, ரத்த சோகையையும் தடுக்கிறது.
  • திராட்சையில் எலும்புகளை உருவாக்க உதவும் போரான் உள்ளது.
  • எலும்புகளுக்குத் தேவையான கால்சியமும் திராட்சையில் நிறைந்துள்ளது.  
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023