காலி சிறைச்சாலையில் அவசரநிலை பிரகடனம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு
காலி சிறைச்சாலையில் கைதிகளுக்கு பரவும் தொற்று நோய் காரணமாக சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் பரவும் நோய் மெனிங்கோகோகல் நோய், இது தொற்றக்கூடியது என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, காய்ச்சல் மற்றும் தோல் தொற்று காரணமாக ஒன்பது கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு கைதிகள் உயிரிழப்பு

இந்த சுகவீனம் காரணமாக கடந்த 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சுகாதார அவசரநிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலையில் அனுமதிப்பது மற்றும் சிறைக்கைதிகளை வெளியே கொண்டு செல்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மேலும், கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கராபிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்திய குழுவினர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ள நிலையில் இந்த மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.