அரசுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி : மீண்டும் வேலைநிறுத்தத்தில் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்
சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கை தொடர்பில் 25 நாட்களுக்குள் பதிலளிக்கப்படாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும்
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா டிஏடி (DAT)கொடுப்பனவை தமக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மூன்று சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் தவிர்ந்த
மூன்று சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
எனினும், மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் என்பன இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |