பாரிய அடையாள வேலை நிறுத்தமொன்றை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் வியாழக்கிழமை (03) பாரிய அடையாள வேலை நிறுத்தமொன்றை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சின் செயலாளர் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கை உட்பட பல விடயங்களை முன்வைத்தே இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் தவறு
தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
“சுகாதாரத் துறை தொடர்பான தவறுகளை நிவர்த்தி செய்ய போதுமான நேரம் இருந்தபோதிலும் அவற்றை நிவர்த்தி செய்ய சுகாதார அதிகாரிகள் தவறிவிட்டனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, மருந்துப் பற்றாக்குறை, மருந்துகளின் தரம் போன்ற கடுமையான பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தை நடத்தவுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.