சுகாதார அமைச்சருக்கு பறந்த கடிதம் - அரசாங்கத்திற்கு மற்றுமொரு நெருக்கடி
strike
nurses
kehelia rambukwella
By Sumithiran
கொவிட் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வெட்டப்பட்டமைக்கு நியாயமான தீர்வு வழங்கக்கோரி நாளை (27) தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அரச தாதியர் சங்கம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரச தாதியர் சங்கம் சுகாதார அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், தாதியர்கள் நாளை (27) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை தங்கள்கடமைகளில் இருந்து விலகியிருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்களுக்கு முறையான வசதிகளை வழங்காதது, ரூ .7,500 கொடுப்பனவை செலுத்தாதது உட்பட எட்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.