உயிருக்கு ஆபத்தான நிலையில் இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் : அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக 40,000க்கும் மேற்பட்ட இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில்,
காத்திருப்போர் பட்டியலில் இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள்
இதய பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக 20,000 க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும், சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக 20,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு(colombo), கண்டி?(kandy), காலி(galle), அனுராதபுரம்(anuradhapura), மட்டக்களப்பு(batticaloa), யாழ்ப்பாணம்(jaffna), ஹம்பாந்தோட்டை(Hambantota) மாத்தறை(matara), பொரளை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை, மாளிகாவத்தை சிறுநீரக மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளின் காத்திருப்புப் பட்டியலில் இந்த நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
நிதி உதவிகளை அரசு வழங்கவேண்டும்
தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்பதால், அரசாங்கம் தலையிட்டு சில நிதி உதவிகளை வழங்கி, அரை அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)