அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
Sri Lankan Peoples
Heat wave
Weather
By Dhilak
வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்போது, நாளையதினத்திற்கான(28) அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் படி, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானத்திற்குரிய மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை
இந்நிலையில், அதிக வெப்பத்துடனான காலநிலைகளின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இந்த அசாதாரணமான காலநிலைகளின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி