வடக்கில் அதிகரிக்கும் வெப்பம்! இவ்வாறு சிறுவர்களை விட்டுச் செல்ல வேண்டாம்
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, மேற்கூறிய பகுதிகளில் வெப்பம், மனித உடலால் உணரப்படும் 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் போதுமான அளவு தண்ணீர்
அதன்படி, மேற்படி பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் முடிந்த வரையில் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் வாகனங்களுக்குள் சிறுவர்களை விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நாட்களில் நடைபெறும் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது குறித்து பெறப்பட்ட சுகாதார ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார்.
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டம்
இதற்கிடையில், நாட்டில் நிலவும் காலநிலையுடன் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற மட்டத்தை நோக்கு வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலை காரணமாக உணர்திறன் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று மருத்துவர் அஜித் குணவர்தன அறிவுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
