யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அதிக வெப்பநிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எச்சரிக்கை நிலை
குறித்த பிரதேசங்களில் இன்று பகல் மனித உடலால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவானது 'எச்சரிக்கை நிலைக்கு' உயர்வடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அதிக வெப்பமான சூழலில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை உண்டாக்கும். தொடர்ந்து அதிக வேலைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே போதிய அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம்
அதீத உடல் உழைப்பு தேவைப்படும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தங்கள் உடல்நலனில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 11 மணி நேரம் முன்