பாகிஸ்தானை தாக்கும் வெப்ப அலை: 450க்கும் மேற்பட்டோர் பலி
வெப்ப அலை தாக்கியதில் பாகிஸ்தானின்(Pakistan) மிகப்பெரிய நகரமான கராச்சியில்(Karachi) நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வரும் நிலையில் கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.
வெப்ப அலை
கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக அந்நாட்டிலுள்ள அறக்கட்டளையொன்று தெரிவித்துள்ளது.
குறித்த அறக்கட்டளையானது, பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி தெரிவிக்கையில், " கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன.
உயிரிழப்பு
மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |