11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : கொட்டித்தீர்க்கப்போகும் மழை
Sri Lankan Peoples
Department of Meteorology
Climate Change
Weather
By Jaso
பதினொரு மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(04) மாலை வெளியிட்ட அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இதன்படி மேற்கு, வடமேற்கு,சப்ரகமுவமாகாணம்,காலி,மாத்தறை, கண்டி, மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், பலத்த மழைவீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்