நிலவும் சீரற்ற காலநிலை! பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Climate Change
By Harrish
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியரின் அறிவுறுத்தல்
அவர் மேலும் குறிப்பிடுகையில், “மழை காரணமாகச் சிறுவர்களிடையே சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
சிறுவர்கள் மழைக் காலத்தில் விளையாடுவதால் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, பெற்றோர்கள் மழையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ”என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்